நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளில் இரு அவைகளின் 75 ஆண்டு கால பயணம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தகவல்..
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் 18ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது.எதற்காக இந்த சிறப்புக்கூட்டம் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி மர்மம் நீடித்து வந்த நிலையில் சிறப்புக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரல் அட்டவணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
முதல் நாளில் நாடாளுமன்றத்தில் 75 ஆண்டு நிறைவை ஒட்டிய விவாதங்கள் நடைபெற உள்ளன. 75 ஆண்டு பயணத்தில் எம்பிக்கள் தங்கள்அனுபவங்களை நினைவலைகளை கற்றுக் கொண்டவற்றை பகிர்ந்துக் கொள்வார்கள். முக்கியமான மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தவிர புதிய நாடாளுமன்ற வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி புதிய கட்டடத்தை திறந்துவைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆயினும மணிப்பூர், வேலைவாய்ப்பு இன்மை போன்ற முக்கியப் பிரச்சினைகளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள மத்திய அரசு தயாராக இல்லை என்று காங்கிரஸ் எம்.பி சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
Comments