உ.பி.யில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஆஸம் கான் தொடர்புடைய வீடுகள், அலுவலகங்களில் வருமானவரித் துறை சோதனை
உத்தர பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோர் அமைச்சரவைகளில் அமைச்சராக பதவி வகித்த சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆஸம் கான் தொடர்புடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
ஆஸம் கான் தலைவராக உள்ள அல் ஜாஹர் அறக்கட்டளையில் நடைபெற்றதாகக் கூறப்பட்டும் வரி ஏய்ப்புப் புகாரில் இச் சோதனை நடைபெற்று வருகிறது. ராம்பூர் சதார் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அவதூறு பேச்சு வழக்கில் மூன்று ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments