புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் பலி

0 1373

டெங்கு பாதிப்பிற்காக புதுச்சேரியில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்தனர். புதுச்சேரி குருமாம்பேட் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி காய்ச்சல் காரணமாக, மூலகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதே போன்று, தருமபுரி மேட்டுத் தெருவைச் சேர்ந்த வினோத் என்பவரின் மனைவி மீனா ரோஷினி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 8ம் தேதி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments