கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரிப்பு - 2 பேர் உயிரிழப்பு; சிகிச்சையில் 2 பேர் - கேரள சுகாதாரத் துறை எச்சரிக்கை

0 4835

கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால், கண்ணூர், வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மாநில சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோழிக்கோடு மாவட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து அம் மாவட்டத்திலும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சிலுடன் தொடர்பு கொண்டு, நிபா வைரஸ் தொற்று பாதிப்பை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சிகிச்சையில் இருக்கும் இருவருக்குத் தேவையான மருந்துகள் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை, கேரள சட்டமன்ற கூட்டத்திலும், அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். நிபா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் நிபா வைரஸ் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளதுடன், தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments