'மேக் இன் இந்தியா' திட்டம் - பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு.. !!
பிரதமர் மோடியின் 'மேக் இன் இந்தியா' கொள்கையைப் பின்பற்றுமாறு ரஷ்ய மோட்டார் வாகன உற்பத்தியாளர்களுக்கு அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.
ரஷ்யாவின் துறைமுக நகரமான விளாடிவோஸ்டாக்கில் நடைபெற்ற கிழக்கு பொருளாதார மன்றத்தின் 8-ம் ஆண்டு கூட்டத்தில் புதின் பங்கேற்று பேசினார்.
ரஷ்யாவிடம் இதற்குமுன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கார்கள் இல்லை என்று தெரிவித்த அவர், ஆனால் தற்போது உற்பத்தி செய்து வருவதாக கூறினார்.
வெளிநாடுகளிலிருந்து ரஷ்யா இறக்குமதி செய்த மெர்சிடிஸ், ஆடி கார்களை விட அவை மிகவும் சிறப்பானவையாக இருக்கும் என தெரிவித்தார்.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆட்டோ மொபைல்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய புதின், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா ஏற்கனவே இதற்கான முன்மாதிரிகளை அமைத்துள்ளதாக கூறினார்.
உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 'மேக் இன் இந்தியா' கொள்கையை கொண்டுவந்த பிரதமர் மோடி, அவற்றை வாங்கவும் மக்களை உற்சாகப்படுத்தி வருவதாக பாராட்டு தெரிவித்தார். பிரதமர் மோடியின் செயல் சரி என்றும் புதின் குறிப்பிட்டார்.
Comments