மொராக்கோ நிலநடுக்கத்தில் 2,862 பேர் உயிரிழப்பு... உதவ முன்வந்த இந்திய அரசுக்கு மொராக்கோ தூதுவர் நன்றி
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மொராக்கோவிற்கு இந்திய அரசு உதவ முன்வந்தமைக்கு அந்நாட்டு தூதுவர் முகமது மலிக்கி நன்றி தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு மொராக்கோவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இரண்டாயிரத்து 862 ஆக உயர்ந்துள்ளது.
வீடுகளை இழந்த பல்லாயிரக்கணக்கானோர் தொடர்ந்து 3வது நாளாக திறந்தவெளியில் தங்கிவருகின்றனர். பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் நாட்டு மீட்பு குழுவினர், மொராக்கோ ராணுவத்தினருடன் இணைந்து மலை கிராமங்களில் மீட்பு பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
2 ஆண்டுகளுக்கு முன் மொராக்கோ அரசுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்த அண்டை நாடான அல்ஜீரியா கூட, 3 விமானங்களில் நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளது.
Comments