உச்சநீதிமன்ற மூத்த பெண் வழக்கறிஞர் கொலை... ஸ்டோர் ரூமில் பதுங்கியிருந்த கணவர் கைது

0 1798

உச்சநீதிமன்ற பெண் வழக்கறிஞர் ஒருவரை கொலைசெய்ததாக அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

61 வயதாக ரேணு சின்கா தனது கணவரான அஜய்நாத் சின்காவுடன் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், ரேணுவின் சகோதரர் போன் செய்தபோது யாரும் எடுக்காததால் போலீசில் புகார் அளித்துள்ளார்.

வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது குளியலறையில் ரேணு சடலமாகக் கிடந்தார். சடலத்தை மீட்ட போலீஸார் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

ரேணுவுடன் அவரது கணவர் மட்டுமே தங்கியிருந்ததால் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றனர். கடைசியில் அஜய்நாத் வீட்டின் மாடியில் ஸ்டோர் ரூம் ஒன்றில் பதுங்கியிருந்ததை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.

சொத்து தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments