ரூ.25 கோடி சொத்தை பறிகொடுத்த நடிகை கவுதமி.. சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு..!

0 14339

25 கோடி ரூபாய் மதிப்பிலான தன்னுடைய சொத்துக்களை அழகப்பன் என்பவர் மோசடி செய்து அபகரித்துள்ளதாக நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

குரு சிஷ்யன் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை கவுதமி 125க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி அதில் இருந்த மீண்ட அவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், அழகப்பன் என்பவரும் அவரது குடும்பத்தினரும் தனக்கு சொந்தமான 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மோசடி செய்து அபகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டதாகவும், இதே காரணத்தினால் தனது அசையா சொத்துக்களை பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அழகப்பன் என்கிற நபர் தனக்கு சொத்துக்களை வாங்கவும் விற்கவும் உதவியாக இருந்ததாக கூறியுள்ள கவுதமி,
ஸ்ரீபெரும்புதூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமது சொத்துக்களை விற்பனை செய்வதற்கு அழகப்பனை பவர் ஏஜென்டாக மாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.அது தொடர்பான தொடர் நடவடிக்கைக்காக பல்வேறு பெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கியதாகவும் வெற்று பேப்பர்களில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை பயன்படுத்திக் கொண்டு அழகப்பன், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் தனது கையெழுத்துக்களைப் பயன்படுத்தி போலியான ஆவணங்களை உருவாக்கி சொத்துக்களை அபகரித்துள்ளதாக கவுவதமி குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக 4 விதமான மோசடிகள் மூலமாகவும் தனது வங்கிப் பரிவர்த்தனைகள் ஆய்வு செய்ததன் அடிப்படையிலும் இந்த மோசடியை கண்டுபிடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

சொத்துக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட தன்னை அரசியல் மற்றும் அதிகார பலத்தால் மிரட்டுவதாகவும், தன் மகளுக்கும் தனக்கு உதவி செய்பவர்களுக்கும் கொலை மிரட்டல் கொடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தனது மகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக தன்னிடமிருந்து சுமார் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தன் குடும்பத்தினர் மூலமாக அபகரித்த அழகப்பன் தொடர்ந்து தன்னிடம் உள்ள மற்ற சொத்துக்களையும் மிரட்டி வாங்க முயற்சி செய்வதாகவும் நடிகை கவுதமி கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக நடிகை கௌதமியிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments