200மீட்டர் தூரத்திற்கு மண்டிக் கிடக்கும் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
காரைக்கால் திருமலைராஜனாறு கடைமடை நீர்தேக்க அணை பகுதியில் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு ஆகாயத்தாமரை செடிகள் மண்டிக் கிடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
நீரை தேக்கி வைக்க முடியாமல் கடலில் வீணாக கலப்பதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் இம்மாவட்டத்தில் பாயும் காவிரியின் கிளை ஆறுகள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில்லை எனவும் அனைத்து ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்ட கடைமடை நீர்தேக்க அணை பகுதிகளை சுத்தம் செய்வது கிடையாது எனவும் விவசயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
Comments