மின்கட்டணம் உயர்வால் தொழில் நிறுவனங்கள் பாதிப்பு... தொழில்துறையினரை சந்திக்க முதலமைச்சர் தயக்கம்
மின்கட்டணம் உயர்வு தொடர்பாக தொழில் துறையினரை சந்திக்க முதலமைச்சர் தயக்கம் காட்டி வருவதாக தமிழ்நாடு தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அக்கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் கோவையில் கொடிசியா அரங்கத்தில் நடைபெற்றது.
அதன் பின் பேட்டியளித்த கூட்டமைப்பினர், கடந்த வருடம் அதிகப்படியாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருவதாக தெரிவித்தனர்.
112 முதல் 150 கிலோ வாட் மின்சாரம் வரையில் உபயோகிக்கும் தொழிற்சாலைகள் தனியாரிடமிருந்து நேரடியாக மின்சாரம் வாங்கும் நடைமுறைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பது உட்பட 7 கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Comments