பிக் பாஸ்கெட், பிக்பஸார், டீ மார்ட் போன்ற இ-காமர்ஸ் இணையதளங்களை போலியாக உருவாக்கி மோசடி 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்
பிக் பாஸ்கெட், பிக்பஸார், டீ மார்ட் போன்ற இ-காமர்ஸ் இணையதளங்களை போலியாக உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு சென்னை சைபர் க்ரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இ-காமர்ஸ் நிறுவனங்கள் பெயரில் வசீகரிக்கும் வகையில், தள்ளுபடி அறிவித்து தங்களின் போலி செயலியை பதிவிறக்கம் செய்ய வைத்து பண அட்டைகளில் இருந்து பணத்தை இந்த கும்பல் திருடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே, Apk வடிவில் வரும் எந்தவிதமான செயலிகளையும் சமூக வலைதளங்கள் மூலமாக கிடைக்கும் லிங்குகள் மூலமாக பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அதனையும் மீறி மோசடிக்கு உள்ளாகும் பட்சத்தில் உடனடியாக 1930 மற்றும் அரசின் சைபர் க்ரைம் இணையதளத்தின் மூலமாக புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments