குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்கவில்லை என குற்றச்சாட்டு... மனுக்களை ஆற்றில் வீசிச் சென்ற மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள்
நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லையெனத் தெரிவித்து மனுக்களை தாமிரபரணி ஆற்றில் இரண்டு தி.மு.க. கவுன்சிலர்கள் வீசிச் சென்றனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் நெல்லை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் பவுல்ராஜ், இந்திராணி மணி ஆகியோர் மனு அளிக்கச் சென்றனர்.
கூட்டத்தில், ஆட்சியர் பங்கேற்காததால் தங்களது மனுக்களை அருகில் உள்ள ஆற்றில் கிழித்து வீசிச் சென்றனர்.
மனக்காவலம்பிள்ளை நகரில் சாலையை கடக்கும் மக்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருவதால் அப்பகுதியில் வேகத்தடை அமைக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மனுக்களை ஆற்றில் வீசியதாக கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
Comments