கப்பலுக்கு வேலைக்குச் சென்ற முன்னாள் ராணுவவீரரின் மகன் காணாமல் போனதாக நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் புகார்

0 1022

கப்பலில் வேலைக்குச் சென்று காணாமல் போனதாக கூறப்படும் இளைஞரை மீட்டுத்தரக் கோரி அவரது உறவினர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஓய்வுப்பெற்ற ராணுவவீரர் மகாராஜனின் மகன் வெற்றி விஷ்வா, மரைன் இன்ஜீனியரிங் முடித்து விட்டு ஆந்திர மாநிலத்தில் தனியார் கப்பல் நிறுவனத்தில் கடந்த 6 மாதமாக பணியாற்றி வந்துள்ளார்.

7ம் தேதி இரவில் குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலமாக வெற்றி விஷ்வா பேசிய நிலையில், மறுநாள் காலையில் அவர் பணிக்கு வரவில்லையென கப்பல் நிறுவனம் தெரிவித்தாக கூறப்படுகிறது.

கப்பல் இருக்கும் இடத்திற்கு சென்ற மகாராஜனையும் அவர்கள் அனுமதிக்கவில்லையென கூறப்படுகிறது. உரிய விசாரணை நடத்தி வெற்றி விஷ்வாவை கண்டுபிடித்து தரக்கோரி அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments