கடன் செயலியில் கடன் வாங்கியதால் நேர்ந்த விபரீதம்.. நிர்வாண படங்களை வெளியிடுவதாக மிரட்டி ரூ.3 லட்சம் பறித்த மர்ம நபர்
புதுச்சேரியில் கடன் செயலியில் கடன் வாங்கியவரின் நிர்வாண படங்களை வெளியிடுவேன் என மிரட்டி 3 லட்சம் ரூபாய் பறித்த நபர் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லித்தோப்பைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ் என்பவர் அவசர தேவைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் செயலி மூலம் 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று, ஒரு வாரத்திலேயே அந்த தொகையை திரும்ப செலுத்தி விட்டார்.
இந்நிலையில் ஆண்ட்ரூசின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய நபர் மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்தது மட்டுமின்றி நிர்வாண படங்களை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்ததை அடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
Comments