பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை.. 700 கண்காணிப்பு கேமராக்களை கவனிக்க சிறப்பு பயிற்சிபெற்ற மகளிர் போலீஸார்
டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத மண்டபத்தில் காவல்துறையினர் புதிதாக சிசிடிவி கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையை உருவாக்கி உள்ளனர். இதனை டெல்லி மகளிர் காவல்துறையினர் பராமரிக்க உள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிசிபி சிறப்பு பிரிவு காவல்துறை அதிகாரி பிரதிக்சா கோதாரா, இந்தப் பெண் போலீசார் இந்தப் பணிக்காக சிறப்பு பயிற்சிகளைப் பெற்றுள்ளதாகவும் ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் இந்தக் கண்காணிப்பு அறையில் இருந்து 700 கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட முடியும் என்றும் தெரிவித்தார்.
தகவல் தொடர்புகளுக்கான தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
Comments