அரசுத் திட்ட நிதியில் 371 கோடி ரூபாயை சந்திரபாபு நாயுடு மோசடி செய்துள்ளதாகப் சிறப்புப் புலனாய்வுத் துறை புகார்.. !!
ஊழல் வழக்கில் சிறப்புப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஷெல் நிறுவனங்கள் மூலம் சுமார் 371 கோடி ரூபாய் அளவுக்கு திட்டமிட்டு பண முறைகேட்டில் ஈடுபட்டதாக சிறப்புப் புலனாய்வுத் துறை குற்றம் சுமத்தியுள்ளது.
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்தபோது, இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக அரசு சார்பில் திறன் மேம்பாட்டுக் கழகம் தொடங்கப்பட்டு, சீமென்ஸ் நிறுவனத்துடன் மொத்தம் 3 ஆயிரத்து 356 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மாநில அரசின் 10 சதவீத நிதி பங்களிப்புடன் தனியார் நிறுவனத்தின் 90 சதவீத நிதியுடன் திட்டம் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அரசின் பத்து சதவீத நிதிப் பங்களிப்பான சுமார் 371 கோடி ரூபாயை, நிதித்துறை அதிகாரிகளின் ஆட்சேபணைகளையும் மீறி சந்திரபாபு நாயுடு முறைகேடு செய்துள்ளதாக சிஐடி தெரிவித்துள்ளது.
அரசு நிதிப் பங்கான 371 கோடி ரூபாயில் 241 கோடி ரூபாய், அலைடு கம்யூட்டர்ஸ், ஸ்கில்லர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், நாலெட்ஜ் போடியம் உள்ளிட்ட ஷெல் நிறுவனங்களுக்கு முறைகேடாக அனுப்பப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Comments