நடைபாதையை மறைத்து திமுக வரவேற்பு பேனர் வைக்கப்பட்டதாகப் புகார்.. சம்பந்தபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உறுதி.. !!
சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக நடைபாதையை மறித்து பேனர் வைக்கப்பட்டதாகவும் பாதையைத் துளையிட்டு கொடிக்கம்பம் நடப்பட்டதாகவும் புகார் எழுந்த நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநாகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே சாலையிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற திருமண விழாவில் திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்றார்.
அவரது வருகைக்காக நடைபாதையை மறித்து பேனர் வைக்கப்பட்டதாகவும் நன்றாக இருந்த பாதையைத் துளையிட்டு கொடிக்கம்பம் நடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பதிலளித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சாலை மட்டுமல்ல, இதுபோன்ற சம்பவங்கள் எங்கு நடைபெற்றாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
Comments