15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உலக அளவில் அரிசி விலை உயர்ந்துள்ளது - ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு
அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததைத் தொடர்ந்து உலக அளவில் அரிசி விலை 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் மாதத்தில் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலை குறைந்தாலும், முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் அரிசியின் விலை 9.8 சதவீதம் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையால் உலகளாவிய வர்த்தகத்தில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஐநா உணவு மற்றும் வேளாண் அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments