மொராக்கோ நாட்டில் 6.8-ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்... இடிபாடுகளில் சிக்கி 820-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு
மொராக்கோ நாட்டில் நேரிட்ட நிலநடுக்கத்தில் 820-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க மாரக்கேஷ் நகரின் அருகே இரவு நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவையில் 6 புள்ளி 8-ஆக நில நடுக்கம் பதிவானது. இரவு நேரம் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவை நிலநடுக்கத்தில் சேதம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலங்களில் ஒன்றான குதுப்பியா தொழுகை கோபுரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
நில நடுக்கத்தால் வீடுகளை இழந்தவர்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கட்டிட இடிபாடுகளில் பலர் தொடர்ந்து சிக்கி இருப்பதாக கருதப்படும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Comments