நடிகர் மாரிமுத்துவின் உடல் சொந்த ஊரில் தகனம்.. கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டு இறுதி மரியாதை
தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகருமான மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைத் தேரியில் தகனம் செய்யப்பட்டது.
சென்னையில் மாரடைப்பால் காலமான அவரது உடல் சொந்த ஊரில் உறவினர்களும் உள்ளூர் மக்களும் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது.
மாரிமுத்து இயக்கிய புலி வால் படத்தில் நடித்துள்ள நடிகர் விமல் பசுமலைத் தேரிக்கு சென்று மாரிமுத்துவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து மாரிமுத்துவின் உடல் ஊர்வலமாக கொண்டு சென்று பசுமலைத் தேரி சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது.
Comments