ஜி20 உச்சிமாநாட்டை சீன அதிபர் ஷி ஜின்பிங் புறக்கணித்தது ஏன்?
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனப் பிரதமர் லீ கியாங் டெல்லி வந்துள்ளார்.
உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்து வரும் சீனாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகின்றன.
அதிபர் ஷி ஜின்பிங் ஜி 20 மாநாட்டில் பங்கேற்காதது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வமான விளக்கமும் அளிக்கப்படவில்லை. உள்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள், இந்தியாவுடன் ஏற்பட்ட எல்லைப் பிரச்சினையால் இருதரப்பு உறவில் விரிசல் என்று காரணங்கள் கூறப்படுகின்றன.
Comments