இணையத்தில் மசாஜ் செண்டர் குறித்து தேடியவரின் சபலத்தை பயன்படுத்தி கட்டிப்போட்டு, நகை, பணம் கொள்ளை

0 1852

சென்னை நுங்கம்பாக்கத்தில் மசாஜ் செண்டர் குறித்து இணையத்தில் தேடிய இளைஞரை தனியாக வரவழைத்து, கட்டிப்போட்டு பணம் நகைகளை பறித்துச் சென்ற கும்பல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கார்த்தி என்ற அந்த இளைஞர் தனியார் மென் பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்றிரவு தனது செல்போனில் மசாஜ் செண்டர் குறித்து தேடியபோது, அழைப்பு ஒன்று வந்துள்ளது.

குமரப்பா தெருவில் மசாஜ் சென்டர் புதிதாக திறந்திருப்பதாகவும், சலுகை விலையில் தேவைப்படும் வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் எனவும் கூறியுள்ளனர். அவர்கள் கூறியதை நம்பி சென்ற கார்த்திக்கை தனி அறையில் கட்டிப்போட்டு செயின், மோதிரம் உள்ளிட்ட இரண்டு சவரன் தங்க நகை மற்றும் பர்சில் இருந்த நான்காயிரம் பணத்தை பறித்துள்ளனர். அத்துடன் விடாமல் அவரது கிரெடிட் கார்டை வாங்கிச் சென்று, ஒரு லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் பணத்தை ஏடிஎம் மூலம் எடுத்துள்ளனர்.

கார்த்தியின் விசும்பல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலை அடுத்து, நுங்கம்பாக்கம் காவல் நிலைய போலீசார் வந்து அவரை மீட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments