பிரதமர் மோடியின் முயற்சிக்கு மன்மோகன் சிங் ஆதரவு

0 2917

ரஷ்யா, உக்ரைன் இடையே அமைதி ஏற்படுவதற்காக பிரதமர் மோடி எடுத்து வரும் முயற்சிக்கு  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதை விட அதிக நம்பிக்கையுடன் இருப்பதாகவும், அந்த நம்பிக்கையானது, இந்தியா ஒரு இணக்கமான சமுதாயமாக இருக்க வேண்டும் என்பதில் இருப்பதாகவும் கூறினார்.

அமைதியான ஜனநாயகம், அரசியலமைப்பு மதிப்பு, வளர்ந்து வரும் பொருளாதாரம் ஆகியவற்றை கொண்டுள்ள இந்தியாவுக்கு, புதிய உலகை வழிநடத்துவதில் முக்கிய பங்கு இருப்பதாக தெரிவித்தார்.

ரஷ்யா, உக்ரைன் இடையேயான மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தி வருவதை பாராட்டியுள்ள அவர், இந்த சமரச முயற்சியில், இந்திய இறையாண்மை மற்றும் பொருளாதாரம் பாதிக்காத வகையில் பிரதமர் மோடி செயல்படுவதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments