காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு உதவியவர்களின் சொத்துக்கள் பறிமுதல் - காஷ்மீர் காவல்துறை
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு உதவிகள் செய்த நூற்றுக்கணக்கானோரின் சொத்துக்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தோர் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களின் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகள் தோடா மாவட்டத்தில் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
சொத்துக்களை இழந்தவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பயங்கரவாதத்தை ஊக்குவிக்க முயற்சித்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இதுபோல் 4 ஆயிரத்து 200 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய தில்பாக் சிங், அவர்களில் ஆயிரத்து 990 பேர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருப்பதாகவும் கூறினார்.
Comments