பொதுமக்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ஸ்கேன் செய்த கிருஷ்ணா டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொது மக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஸ்கேன் செய்ததாக கிருஷ்ணா டயக்னாஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
இன்று ஒரே நாளில் பொது மக்கள் 7 பேரிடம் இருந்து தலா 2500 ரூபாய் வசூலித்த பின் ஸ்கேன் செய்யப்பட்டதை ஆய்வின் போது கண்டறிந்த அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இதையடுத்து அங்கு செயல்பட்டு வந்த ஸ்கேன் சென்டர் மூடப்பட்டது. தேசிய நலவாழ்வு குழுமத்தின் மூலம் புதிய எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரம் வாங்கவும், அதற்குரிய பணியாளர்களை நியமிக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
Comments