சவுதி அரேபியாவில் விமானத்திற்கு காத்திருக்கும் பயணிகள் தூங்கி ஓய்வெடுக்கலாம்... 6 மணி நேரம் தங்க இந்திய மதிப்பில் ரூ.5000 கட்டணம்
சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களுக்கு காத்திருக்கும் பயணிகள் தூங்கி ஓய்வெடுக்க ஸ்லீப்பிங் கேப்ஸ்யூல் அறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அறைகளில் ஏசி, திரைசீலைகள், வெளிச்சத்தை தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளும் வகையிலான மின்விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வாசன் என்ற நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த அறைகளில் 6 மணி நேரம் தங்க இந்திய மதிப்பில் சுமார் 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த கேப்ஸ்யூல் அறைகளை கடற்கரைகள், தனிமைப்படுத்தப்பட்ட தீவுகள் உள்ளிட்ட இடங்களில் விரிவுபடுத்தவும், ஹஜ், உம்ரா காலங்களில் சேவையை வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments