கார் திருட்டை ஊக்குவிக்கும் விநோத டிக்டாக் சேலஞ்ச்... நியூயார்க்கில் கடந்த 8 மாதங்களில் 10,600 கார்கள் திருட்டு
கார்களைத் திருட ஊக்குவிக்கும் டிக்டாக் சேலஞ்சால் நியூயார்க்கில் கார் திருட்டு 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கியா அல்லது ஹுண்டாய் கார் ஓட்டி வருபவர்களிடம் லிஃப்ட் கேட்டு ஏறி, பின் ஓட்டுநரை மிரட்டி காரை திருடிச் செல்ல வேண்டும் என்ற டிக்டாக் சவால் நியூயார்க்கில் பிரபலமடைந்து வருகிறது.
கடந்த 8 மாதங்களில் அங்கு பத்தாயிரத்து 600 கார்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்த போலீசார், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், இந்த டிக்டாக் சேலஞ்ச் பிரபலமானதிலிருந்து கார் திருட்டு 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர்.
இது தொடர்பாக கைது செய்யப்படுபவர்களில் பாதி பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments