சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளைப் பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்... பிடிபட்ட 26 மாடுகளை கோசாலைக்கு அனுப்பிவைப்பு
காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளைப் பிடித்து கோசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
மாட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதை வழக்கமாக கொண்டிருந்த மாநகராட்சி ஊழியர்கள், உரிமையாளர்கள் மீண்டும் மீண்டும் மாடுகளை சாலையில் விட்டுவிடுவதால் அண்மை காலமாக பிடிபடும் மாடுகளை திருவண்ணாமலையில் உள்ள ஒரு கோசாலைக்கு அனுப்பினர்.
இன்று 11 மாடுகள் பிடிபட்டிருந்த நிலையில், பெண் ஒருவர் தனது மாட்டை விட்டுவிடுமாறு அதிகாரிகளிடம் கண்ணீர் மல்க மன்றாடினார்.
வெள்ளைப்பசு ஒன்று சக மாடுகள் அடைக்கப்பட்டிருந்த லாரியை சுற்றி சுற்றி வந்தது அங்கிருந்தவர்களுக்கு சற்று நெருடலை ஏற்படுத்தியது.
Comments