திருக்குவளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் குறுவைப் பயிர்கள் பதராக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை..!
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் குறுவைப் பயிர்கள் பதராக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வெள்ளையாற்று நீரை நம்பி சாகுபடி செய்யப்பட்ட நிலையில், ஆற்றிலும், வாய்க்கால்களிலும் தண்ணீர் குறைவாக வந்ததால், டீசல் இயந்திரம் மூலம் தண்ணீரை இரைத்து சாகுபடியில் ஈடுபட்டனர்.
ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து பயிரிட்ட நிலையில், சுமார் 10 ஏக்கரில் உள்ள பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வாய்க்கால்களில் உடனடியாக போதுமான தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உரிய நிவாரணம் வழங்கினால் மட்டுமே தாளடி மற்றும் சம்பா பணியில் ஈடுபட முடியும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Comments