பாஜக - அதிமுக உறவு கணவன், மனைவி உறவைப் போன்றது - ஹெச்.ராஜா
பாஜக - அதிமுக உறவு கணவன் - மனைவி உறவு போன்றது என்றும், தினமும் மனைவிக்குக் கணவன் ஐ லவ் யூ சொல்ல முடியாது என்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சனாதன தர்மத்தை ஒழிப்பதாகக் கூறிய உதயநிதிக்கு எதிராக பாஜக சார்பில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஹிந்து தர்மத்துக்குத் தொன்றுதொட்டு வழங்கிவரும் பேர் சனாதன தர்மம் என்றும், தாய், சகோதரி, மனைவி போன்ற உறவுகள் நிலையானவை, அவற்றை எப்படி மாற்ற முடியும் என்றும் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார்.
Comments