பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பியது ஆதித்யா எல்-1

0 40153

சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் பூமி மற்றும் நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.

கடந்த 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலத்தின் முதல்கட்ட சுற்றுவட்டப்பாதை உயரம் கடந்த 3-ம் தேதியும், 2-ம் கட்ட சுற்றுவட்டப்பாதை உயரம் கடந்த 5-ம் தேதியும் வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டது.

3-ம் கட்ட சுற்றுவட்டப்பாதை உயரம் வரும் 10-ம் தேதி அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செல்ஃபியுடன், பூமியையும், சந்திரனையும் ஆதித்யா எல்1 புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது. கடந்த 4-ம் தேதி இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments