சர்வதேச வளர்ச்சியில் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பங்கு முக்கியமானது - பிரதமர் மோடி
சர்வதேச வளர்ச்சியில், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பங்கு முக்கியமானது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற 20ஆவது ஆசியான்-இந்தியா உச்சி மாநட்டில் பேசிய பிரதமர், ஆசியான் நாடுகளுடனான இந்தியாவின் உறவு 40 ஆண்டுகளை கடந்தும் நீடிப்பதாக கூறினார். வரலாறு மற்றும் புவியியல் அமைப்பையும் தாண்டி, பிராந்திய ஒருங்கிணைப்பு, அமைதி, செழிப்பு, நம்பிக்கை உள்ளிட்டவை ஆசியான் நாடுகளையும், இந்தியாவையும் ஒருங்கிணைப்பதாக தெரிவித்தார்.
இந்தியாவின் கிழக்குக் கொள்கையின் மையத் தூணாக ஆசியான் உள்ளதாக தெரிவித்தார். இந்தோ-பசிபிக் முன்முயற்சியில் ஆசியானின் கண்ணோட்டத்தை இந்தியா ஆதரிப்பதாக கூறினார். உலக நிச்சயமற்ற சூழலில் கூட, அனைத்து துறையிலும் ஆசியான் நாடுகளின் பரஸ்பர ஒத்துழைப்பு சீராக முன்னேறி வருவதாக பிரதமர் தெரிவித்தார். ((GFX-OUT))
மாநாட்டில் உரையாற்றுவதற்கு முன்னர் ஆசியான் அமைப்பு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
முன்னதாக ஜகார்தா சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையம் முதலே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் தங்கியுள்ள ரிட்ஸ் கார்ல்டன் ஓட்டலில் இந்தோனேசிய வாழ் இந்தியர்கள் பிரதமரை வரவேற்றனர். தேசியக் கொடிகளை அசைத்தும், செல்ஃபி எடுத்தும் அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்..
Comments