நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் எதற்காக ? ரகசியம் ஏன் ? மத்திய பாஜக அரசுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்..!
நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டியது என்ன என்று ரகசியமாக வைத்திருப்பது குறித்து மத்திய பாஜக அரசுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி .சோனியா காந்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மத்திய அரசு நாடாளுமன்றத்தக் கூட்டுவது ஏன் என்று அறிவிக்க வேண்டும் என்றும் சோனியா காந்தி கோரியுள்ளார்.
இந்நிலையில் சோனியாவின் கடிதத்துக்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான திட்டம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.ஒன்றுமில்லாத விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் சோனியாவுக்குஅரசுத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
Comments