தமிழ்நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்.. கண்ணன், ராதை வேடமிட்ட குழந்தைகள் அணிவகுப்பு..!
கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு சென்னை அடுத்த வண்டலூர் கிருஷ்ணர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
மதுராந்தகம் மற்றும் காஞ்சிபுரத்தில் வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் உறியடி நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் திரளான குழந்தைகள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை காளிங்க நர்த்தன கிருஷ்ணர் ஆலயத்தில் கிருஷ்ணர் சிலையை ஊஞ்சலில் ஆட்டி பக்தர்கள் கொண்டாடினர். பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் கிருஷ்ணர், ராதை வேடமணிந்த குழந்தைகள் கலந்து கொண்டனர்.
அருப்புக்கோட்டை பட்டாபிராமன் திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் திரளான குழந்தைகள் பங்கேற்றனர்.
இதே போன்று தஞ்சை மேல வீதி யாதவ கிருஷ்ணன் கோயிலில் நடைபெற்ற உறியடி விழாவில் இளைஞர்கள் பங்கேற்று பரிசுகளை தட்டிச் சென்றனர்.
வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ராதேகிருஷ்ணர் கோவிலில் திரளான சிறுவர்கள் கலந்து கொண்டு உறியடித்தனர்....
கோவில்பட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கிருஷ்ண ரத ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை விட்டோபா பெருமாள் கோவிலில் சிறார்கள் கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து சுவாமிதரிசனம் செய்தனர்.
காரைக்கால் கோவில்பத்து கோதண்டராமர் ஆலயத்தில் பேழையில் எழுந்தருளிய நர்த்தன கிருஷ்ணனை தொட்டு வணங்கி சுவாமி தரிசனம் செய்தனர்.
Comments