நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் நின்றிருக்கும் காட்சியை புகைப்படமாக எடுத்து வெளியிட்டது நாசா
நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் நின்றிருக்கும் காட்சியை புகைப்படமாக எடுத்து அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
நிலவின் தென்துருவப் புள்ளியில் இருந்து சுமார் 600 கிலோ மீட்டர் தூரத்தில் விக்ரம் நிற்கும் காட்சி அந்த படத்தில் இடம் பெற்றுள்ளது.
இயற்கையாக தோன்றிய பள்ளங்களுக்கு மாறாக, விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடம் மட்டும் வெண் நிறப்புள்ளி போல மாறுபட்டு காட்சி தருகிறது.
நிலவின் மேற்பரப்பில் லேண்டர் சாஃப்ட் லேண்டிங் செய்ததன் எதிரொலியாக மண் வெளிப்பட்டு வெள்ளை நிறத்தில் அப்பகுதி காட்சி தருவதாக கூறியுள்ள நாசா, 42 டிகிரி கோணத்தில் லேண்டர் படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
Comments