அமேசன் காடுகள் அழிப்பு ஒரே ஆண்டில் 500 சதுர கிலோமீட்டராக குறைந்தது கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 1,600 சதுர கி.மீ. காடுகள் அழிப்பு
பிரேசிலில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆயிரத்து 600 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமேசன் காடுகள் அழிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் காடுகள் அழிப்பு 500 சதுர கிலோமீட்டராக குறைந்துள்ளதாக அந்நாட்டு விண்வெளி ஆராய்சி மையம் தெரிவித்துள்ளது.
தீவிர இடதுசாரியான லூயிஸ் இனாசியோ அதிபராகப் பொறுப்பேற்றதும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை கடுமையாக்கி பல பழங்குடி பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வன பகுதிகளாக அறிவித்தார்.
இதனா மாட்டு பண்ணைகள் அமைக்கவும், விவசாயத் தேவைகளுக்காகவும் அமேசான் காடுகள் அழிக்கப்படுவதும் ஒரே ஆண்டில் 66 சதவீதம் குறைந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகின் நுரையீரல் என அழைக்கப்படும் அமேசான் காடுகள் கார்பனை உறுஞ்சி ஆக்ஸிஜனை வெளியிட்டு புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Comments