வேலூர் மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

0 1102

வேலூர் மாநகராட்சியில் நடைபெறும் பாதாள சாக்கடை பணிகளால் மக்கள் சிரமத்திற்கு ஆளாவதால், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தினார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பேசிய அவர், குறித்த நேரத்திற்குள் பாதாள சாக்கடை பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரருக்கு காலக்கெடு நீட்டிக்கப்படாது என்றார்.

கால்வாய் பணிகளை முடித்த பிறகு சாலை போடும் பணியை மேற்கொண்டால் மீண்டும் சாலையை தோண்ட வேண்டிய அவசியம் ஏற்படாது என்றும், கால்வாய்களை முறையாக தூர்வார வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments