ஃபுகுஷிமா அணு உலை கழிவு நீரை கடலில் வெளியேற்றம்... மீன் உணவுகளை சாப்பிடலாமா என ஜப்பான் மக்கள் அச்சம்

0 4903

ஃபுகுஷிமா அணு உலை கழிவு நீர் பசிபிக் பெருங்கடலில் வெளியேற்றப்படும் இடம் அருகே பிடிக்கப்படும் மீன்கள் கதிர்வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றனவா என தினமும் சோதனை நடத்தி வருவதாக ஜப்பான் நாட்டு மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் அச்சமின்றி மீன் வாங்கி சாப்பிட ஏதுவாக ஆய்வு முடிவுகளை தினமும் இணையதளத்தில் அவர்கள் பதிவேற்றி வருகின்றனர். டிரிட்டியம்  என்ற கதிர்வீச்சு தனிமத்தை தவிர மற்ற அனைத்து கதிர்வீச்சு தனிமங்களையும் அகற்றிய பிறகே கழிவு நீர் கடலில் வெளியேற்றப்படுவதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

இருந்தபோதும், அங்கிருந்து கடல் உணவுகளை இறக்குமதி செய்ய சீனா தடை விதித்துள்ளது. புகுஷிமா அணு உலையின் ஒட்டுமொத்த கதிர்வீச்சு கழிவு நீரையும் கடலில் வெளியேற்ற 30 ஆண்டுகள் ஆகும் என ஜப்பான் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments