டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு மற்றும் விவசாயிகளுக்கு இழப்பீடு குறித்து முதலமைச்சர் நாளை ஆலோசனை
டெல்டா மாவட்டங்களில் போதிய தண்ணீரின்றி குறுவை சாகுபடிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை வரை சென்றடையவில்லை என விவசாயிகள் கூறியுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் வேளாண்துறை அதிகாரிகள் நேரில் கள ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
அவர்களிடம் மறு விவசாயம் செய்யவும், சம்பா சாகுபடிக்கு தயாராகும் வகையிலும் சம்பா தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்குமாறும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், பயிர் சேத விவரம் மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர், செயலாளர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
Comments