மீன்கடைக்காரர் வெட்டிக் கொலை.. தப்பியோடிய 4 பேர் எங்கே?

0 11096

சென்னை நொளம்பூரில் மீன்கடைக்காரரை சரமாரியாக வெட்டி கொலை செய்த 4பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்

சென்னை நொளம்பூர் அருகே ரெட்டிபாளையத்தில் மீன்கடை நடத்தி வந்தவர் ஜெகன். நேற்று இவரது கடைக்கு மீன் வாங்குவது போல் வந்த 4பேர், திடீரென கடையில் இருந்த மீன் வெட்டும் கத்தியை எடுத்து ஜெகனை சரமாரியாக வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஜெகன் உயிரிழந்ததை அடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

தகவல் அறிந்து வந்த போலீசார் ஜெகனின் உடலைக் கைப்பற்றி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட ஜெகன் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே கோவிலூரைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

சில மாதங்களுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜெகன் மற்றும் அவரது சகோதரர் மதனுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

சொந்த ஊரில் இருந்து தலைமறைவான ஜெகன், கடந்த 2 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்துள்ளார். ராஜேஷ் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் ஜெகனை மர்ம கும்பல் கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கோவிலூர் பகுதியில் கோயில் திருவிழாக்கள், தேவர் ஜெயந்தி, முத்தரையர் சதயவிழா போன்ற நேரங்களில் பேனர் வைப்பதில் அதிமுகவை சேர்ந்த ராஜேஷ் மற்றும் ஜெகன் ஆகியோர் இடையே பல ஆண்டுகளுக்கு முன்பே மோதல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

முத்திரையர் சதய விழாவிற்கு ராஜேஷ் தரப்பினர் வைத்த பேனரை ஜெகன் தரப்பினரும், ஜெகன் தரப்பினர் தேவர் ஜெயந்திக்கு வைத்த பேனரை ராஜேஷ் தரப்பினரும் கிழித்ததால் மோதல் பெரிதாகியுள்ளது.

அதிமுக ஒன்றிய கவுன்சிலராக இருந்த ராஜேஷ் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஜெகன் உட்பட 12 பேரை அடுத்தடுத்த விசாரணையில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஜாமீனில் வெளி வந்த ஜெகன் சொந்த ஊரில் இருந்து தலைமறைவாகி சென்னை நொளம்பூரில் வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. இந்நிலையில் தான் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷ் தரப்பினர், ராஜேசை கொலை செய்த காரணத்திற்காக ஜெகனை பழிவாங்க காத்திருந்ததாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments