ஆன்லைன் மூலம் பழகிய காதலனிடம் பணம் நகைகளை ஏமாந்த சிறுமி.. பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காதலன் கைது.

0 1975

ஆன்லைன் விளையாட்டு மூலம் சிறுமி ஒருவரிடம் பழகி, அவரது படங்களை ஆபாசமாக சித்தரித்து, பணம், நகைகளை பறித்து வந்த நெல்லை மாவட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான அந்த சிறுமிக்கும் நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த பொறியாளரான வேல்முருகன் என்பவனுக்கும் ஃப்ரீபயர் விளையாட்டு மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இளைஞனுடனான பழக்கத்தை காதல் என நம்பிய சிறுமியிடம் அவரது போட்டோக்களைப் பெற்று பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளான்.

படங்களை இணையத்தில் வெளியிட்டுவிடுவானோ என பயந்து சிறுமியும் வீட்டிலிருந்த பணம், 12 சவரன் நகை ஆகியவற்றை அவனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

நகைகள் சிறுக சிறுக காணாமல் போனதையும் சிறுமியின் நடவடிக்கைகளையும் வைத்து சந்தேகமடைந்த பெற்றோர் அவரது செல்போனை வாங்கிப் பார்த்து விஷயத்தை தெரிந்துகொண்டனர்.

அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் நெல்லை சென்ற போலீசார் வேல்முருகனை கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments