சனாதன தர்மம் பற்றி புரிந்து கொண்டு பேச வேண்டும்: தமிழிசை
சனாதன தர்மம் பற்றி புரிந்து கொண்டு பேச வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் ஆசிரியர் தின விழாவில் பங்கேற்றுப் பேசிய ஆளுநர் தமிழிசை, புரிதல் இல்லாமல் விளையாட்டுத் தனமாக திரும்பத் திரும்பப் பேசக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
ஜி-20 மாநாட்டு அழைப்பிதழில் பாரதம் என்று குறிப்பிடப்பட்டு இருப்பதைப் பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஆளுநர் தமிழிசை, பாரத தேசம் என தோள் தட்டுவோம் என்று பாரதியார் பாடியதை சுட்டிக்காட்டியுள்ளார்.
பாரத தேசம் என்று கூறுவது பெருமை சேர்க்கக் கூடியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments