கிருஷ்ணஜெயந்தியையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

0 2094

நாளை கிருஷ்ணஜெயந்தி கொண்டாடப்படவுள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குழப்பத்தையும், தடுமாற்றத்தையும் தவிர்த்து, தெளிந்த நீரைப்போல் மனதை நிலை நிறுத்தி, பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்தால், ஒருவர் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்று அனைத்து சுகங்களும், மன நிம்மதியும் கிடைக்கப் பெற்றவராய் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடலாம் என்ற கிருஷ்ணரின் உபதேசத்தை மனதில் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதரித்த இந்த இனிய நாளில், நாடெங்கும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி பெருக வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments