நெற்பயிர்கள் பதராக மாறும் நிலை உள்ளன காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்
போதுமான தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
காவிரியின் உப ஆறான முள்ளியாற்று பாசனத்தை நம்பி திருத்துறைப்பூண்டி, கோட்டூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.
தற்போது, கதிர்களில் பால் பிடிக்கும் தருவாயில் வாய்க்காலில் போதுமான தண்ணீர் இல்லாததால் பால் பிடிக்காமல் பதராகும் நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
வாய்க்காலில் வரும் நீரை மோட்டார் மூலமாக இறைப்பதற்கே ஏக்கருக்கு ஆயிரத்து 200 ரூபாய் வரையில் செலவாவதாக தெரிவித்த விவசாயிகள், அடுத்த போகம் சாகுபடி செய்வதற்காவது அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.
Comments