எதிர்காலத்தை உருவாக்குவதிலும், கனவுகளை ஊக்குவிப்பதிலும் ஆசிரியர்களுக்கு முக்கிய பங்குண்டு - பிரதமர் மோடி

0 1389

நமது எதிர்காலத்தை உருவாக்குவதிலும், கனவுகளை ஊக்குவிப்பதிலும் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உறுதியான அர்ப்பணிப்புக்காகவும், சமூகத்தில் ஏற்படுத்தும் நல்ல தாக்கத்திற்காகவும் ஆசிரியர்களை வணங்குவதாக கூறியுள்ள பிரதமர், டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவாக தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களுடன் அவர் நடத்திய உரையாடல் வீடியோவையும் எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில், தாய் தந்தைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் ஆசிரியப் பெருமக்கள் என்றும், மாணவச் செல்வங்களை அறிவாற்றல் கொண்டவர்களாய் வளர்த்தெடுத்து வழிகாட்டும் கலங்கரை விளக்கே ஆசிரியர்கள் என்றும் பாராட்டியுள்ளார்.

அறநெறிகளையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தரும் அறிவுப் பெற்றோராக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments