ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழுவின் அறிக்கை தயார்?.. நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பு

0 1897

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவினர் தயாரிக்கும் அறிக்கை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற புதிய கட்டடம் திறப்பு விழாவிற்கு 2 நாட்களுக்குப் பின ராம்நாத் கோவிந்தை பிரதமரின் முதன்மைச் செயலாளரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் சந்தித்துள்ளனர்.

அமித் ஷாவின் வேண்டுகோளை ஏற்று ஜூன் மாதம் 9ம் தேதி முதல் பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட், மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள்,ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்  உள்ளிட்டோருடன் ராம்நாத் கோவிந்த ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆராய கடந்த வெள்ளிக்கிழமை 7 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டு ராம்நாத் கோவிந்த் அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments