பெங்களூரு அருகே மதுரையைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் மீது தாக்குதல்.. ஓட்டலில் டீ குடித்துக் கொண்டிருந்தவரை சரமாரியாக தாக்கிய மர்ம கும்பல்.. !!
பெங்களூரு அருகே ஓட்டலில் தேநீர் குடித்துக் கொண்டிருந்த, மதுரையைச் சேர்ந்த திமுக பிரமுகரை அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கீரைத்துறையை சேர்ந்த குருசாமி கம்மனஹள்ளியில் உள்ள சுக்சாகர் ஓட்டலில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, தமிழக பதிவெண் கொண்ட வாகனத்தில் வந்தவர்கள் கத்தி, அரிவாள்களை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.
குருசாமி மீது, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மதுரை உள்ளூர் நீதிமன்றத்தில் நடந்த கொலை வழக்கு விசாரணை தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்பாக பெங்களூரு வந்ததாக கூறப்படுகிறது.
குருசாமி, மதுரை மாநகராட்சி மண்டலத்தலைவராக இருந்தபோது, அதிமுகவை சேர்ந்த முன்னாள் மண்டலத் தலைவருடன் தகராறு இருந்த நிலையில், முன்விரோதம் காரணமாக, அவர் பெங்களூர் வந்திருப்பதை அறிந்து வந்து தாக்குதல் நடத்தப்பட்டதா உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குருசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பர் எனவும் கூறப்படுகிறது.
Comments