மட்டன் பிரியாணி கேட்டா எச்ச பிரியாணி டெலிவரி..? தொழில் அதிபர் அதிர்ச்சி..!

0 3572

தாம்பரம் அருகே ஸ்விக்கி மூலமாக ஸ்டார் பிரியாணியில் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து , சாப்பிட ஆவலுடன் காத்திருந்தவருக்கு பீசே இல்லாமல் , சாப்பிட்ட பிரியாணியின் மீதியை ஸ்விக்கி ஊழியர் சப்ளை செய்ததாக கட்டுமான அதிபர் புகார் தெரிவித்துள்ளார்

இதற்கு பெயர் மட்டன் பிரியாணியாம்... சிங்கிள் பீஸ் இல்லை... குஸ்கா கூட டப்பாவுக்கு பாதி தான் இருக்கு... தான் சாப்பிட்ட மீதிய தந்துட்டு போயிருக்கான் அந்த ஸ்விக்கி டெலிவரிபாய் ... என்று புகார் தெரிவித்த கட்டுமான அதிபர் சுரேஷ் ..!

பெருங்களத்தூர் காமதேனு நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் , சண்டே மதிய உணவுக்காக மட்டன் பிரியாணியை தாம்பரம் அடுத்த சேலையூர் ராஜ்கீழ்பாக்கம் பகுதியில் உள்ள ஸ்டார் பிரியாணி கடையில் ஸ்விக்கி ஆப் மூலமாக ஆர்டர் செய்துள்ளார்.

ஏற்கனவே மதிய உணவு அருந்துவதற்கு காலதாமதமான நிலையில் இருந்த சுரேஷுக்கு ஸ்டார் பிரியாணியில் இருந்து மட்டன் பிரியாணி பார்சல் என்று டேப் ஒட்டப்படாமல் ஒரு பார்சலை ஸ்விக்கி ஊழியர் கொடுத்துச்சென்றுள்ளார். அதனைப் பெற்றுக் கொண்ட சுரேஷ் திறந்து பார்த்த போது டப்பாவில் மட்டன் பிரியாணியின் அளவு பாதி தான் இருந்துள்ளது

அதனைக் கண்டு சந்தேகமடைந்த அவர் பிரியாணியை ஸ்பூன் மூலம், ஆய்வு செய்தபோது மட்டன் பிரியாணியில் மட்டன் பீசே இல்லாமல் சாப்பிட்டு மீதம் வைச்ச எச்ச பிரியாணி போல் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக ஸ்டார் பிரியாணி கடையை தொடர்பு கொண்டு கேட்டபோது நாங்கள் பிரியாணி முழுவதுமாக மட்டனுடன் பேக் செய்து ஸ்விகி ஊழியர் இடம் கொடுத்து விட்டோம் எனக் கூறியதோடு அதற்கான சிசிடிவி ஆதாரத்தையும் வழங்கினர்

இதனைத் தொடர்ந்து உணவு டெலிவரி செய்த ஸ்விகி ஊழியரான முத்துக்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் என மிரட்டும் தோரணையில் பேசியதோடு பிரியாணில பீஸ் இல்லையா ? எனது மேனேஜரிடம் புகார் கொடுங்கள் அவரு கொண்டு வருவாரு...என ஒருமையில் பேசிவிட்டு அழைப்பு துண்டித்ததாக குற்றஞ்சாட்டினார் சுரேஷ்.

ஸ்விக்கி ஆப்பில் ரேட்டிங் மற்றும் வாட்ஸ் அப்பில் புகார் அளிப்பது தவிர ஸ்விக்கியில் ஒருவரை கூட தொடர்பு கொள்ள வழியில்லை என்பதால் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக சுரேஷ் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments