எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும்.. நம்பிக்கையைப் புண்படுத்தும் விதமாக பேசக்கூடாது - உதயநிதிக்கு மம்தா அறிவுறுத்தல்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன ஒழிப்பு கருத்துக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உதயநிதி ஒரு ஜூனியர் என்றும் அவர் எந்த அடிப்படையில் இந்தக் கருத்தைக் கூறினார் என்று தெரியவில்லை எனவும் குறிப்பிட்டார். தமிழ்நாட்டு மக்கள் மீது தமக்கு மிகவும் மரியாதை இருக்கிறது என்றும், தமிழ்நாட்டுத் தலைவர்கள் எல்லா மதங்களையும மதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனி நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்த மம்தா, இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்பதையும் நினைவுகூர்ந்தார். தம்மைப் பொருத்தவரை தாம் சனாதன தர்மத்தை மதிப்பதாகவும் மம்தா தெரிவித்தார்.
சனாதனம் வேதங்களில் இருந்து பிறந்தது என்று கூறிய மம்தா, மக்களின் தெய்வ நம்பிக்கையின் அடிப்படையில் நாட்டில் எத்தனையோ கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் இருப்பதாகக் குறிப்பிட்டார். ஒரு சாராரின் நம்பிக்கையைப் புண்படுத்தும் விதமாக பேசக்கூடாது என்றும் அவர் உதயநிதிக்கு அறிவுரை வழங்கினார்.
Comments