மழை குறைவால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு வறட்சி நிவாரணமாக 181 கோடியே 40 லட்ச ரூபாயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

0 965

மழை குறைவால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மிதமான வேளாண் வறட்சி நிவாரணமாக 181 கோடியே 40 லட்ச ரூபாயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை, தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் முதலமைச்சர் கலந்துகொண்டார். அதன்படி, வேளாண் மற்றும் உழவர் நலத் துறை சார்பில் 62 கோடியே 42 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டங்களைத் திறந்துவைத்த அவர், 35 கோடி ரூபாய் மதிப்புள்ள வேளாண் கருவிகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.

கேலோ இந்தியா மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த 134 வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகையாக 2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய தங்க நகைகளை உருக்கி தூய தங்கக் கட்டிகளாக மாற்றி முதலீடு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான முதலீட்டுப் பத்திரத்தை திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments